ஃபுட் பாயிசனுக்கு கிளினிக்கில் சிகிச்சை... போலி டாக்டரால் உயிரிழந்த சிறுவன்...

x

ஃபுட் பாயிசனுக்காக ஊசி போட்டுகிட்ட சிறுவன் திடீர்னு இறந்து போயிருக்கிறார். அந்த மரணத்தோட விசாரணையில வெளிவந்த தகவல்கள் பெரும் அதிர்சியை ஏற்படுத்தியிருக்கு. உயிர் பறிக்கும் போலி மருத்துவர்கள்கிட்ட எச்சரிக்கையா இருங்க.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அரசு மருத்துவமனை வளாகம்...

பிள்ளையை பறிகொடுத்த துக்கம் அந்த குடும்பத்தை கண்ணீரில் மூழ்கடித்தது.

ஆசை ஆசையாய் தூக்கிவளர்த்த சிறுவன் பெற்றோரின் கண் முன்னே நுரைதள்ளியபடி பரிதாபமாக இறந்துபோயிருக்கிறார்.

மகனை எதிர்காலத்தில் பெரியா ஆளாக ஆக்கவேண்டும் என்ற பெற்றோரின் கனவு கோட்டை இப்படி அல்பாயிசில் பாதியிலேயே இடிந்துபோயிருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் முறையாக மருத்துவம் படிக்காமல் தவறான சிகிச்சை அளித்தது...

இறந்த சிறுவனின் பெயர் சூரிய பிரகாஷ்... நாட்றம்பள்ளி அடுத்த தோப்பலகுண்டா பகுதியை சேர்ந்தவர். 13 வயதாகும் சூரிய பிரகாஷ் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வந்துள்ளார்.

சம்பவத்தன்று பள்ளியில் நண்பர்களுடன் நாவல் பழம் சாப்பிட்டிருக்கிறார் சூரியபிரகாஷ்... வீட்டிற்கு வந்த பிறகு இரவு உணவு சாப்பிட்டுவிட்டு உறங்கியிருக்கிறார். அப்போதுதான் சாப்பிட்ட உணவு செரிக்காமல் சூரிய பிரகாஷிற்கு food poison ஆகியிருக்கிறது.

இதனால் பதறிப்போன பெற்றோர் மகன் சோர்வாக இருப்பதை கண்டு காலையில் அதே பகுதியில் கிளினிக் வைத்திருந்த கோபிநாத் என்பவரிடம் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

கோபிநாத்திடம் ஊசிப்போட்டுவிட்டு வந்த பிறகு சிறுவனின் உடலில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. பேச்சு மூச்சில்லாமல் மயக்க நிலைக்கு சென்றிருக்கிறார் சூரிய பிரகாஷ்.

சிறுவன் அசைவின்றி கிடந்ததை பார்த்து பயந்துபோன பெற்றோர் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். ஆனால் சூரிய பிரகாஷ் பாதி வழியிலேயே இறந்துபோயிருக்கிறார்.

சிறுவனின் திடீர் மரணத்தால் சந்தேகமடைந்த பெற்றோர் நாயன்செருவு பகுதியில் கிளினிக் வைத்து மருத்துவம் பார்த்த கோபிநாத் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்கள். அப்போது தான் கோபிநாத் ஒரு போலி மருத்துவர் என்ற உண்மை தெரியவந்திருக்கிறது.

லேப் டெக்னீஷியனாக வேலை செய்து வந்த கோபிநாத் கடந்த பத்து வருடங்களாக இதே பகுதியில் சளி, காய்ச்சல் போன்ற பிரச்சனைகளுக்கு மருத்துவம் பார்த்திருக்கிறார்.

இவரிடம் சிகிச்சை பெற்றுவந்த ஒரு சிலருக்கு அவ்வபோது உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், விழிப்புணர்வு இல்லாத பொதுமக்கள் கோபிநாத் மீது புகார் எதுவும் அளிக்கவில்லை முன்வரவில்லை. கைராசியான டாக்ட்டர் என அவரை நம்பியிருக்கிறார்கள்.

இந்த சூழலில்தான் சிறுவன் சூரிய பிரகாஷூக்கு வீரியமான மருந்தை ஊசி மூலம் செலுத்தியிருக்கிறார் கோபினாத். மருந்தின் சக்தியை தாங்கமுடியாமல் வாயில் நுரைதள்ளி சூரிய பிரகாஷ் இறந்து போயியிருக்கிறார்.

தவறான சிகிச்சையால் சிறுவன் மரணமடைந்தால் போலி மருத்துவர் கோபினாத் மீது வழக்குப்பதிவுச் செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...



Next Story

மேலும் செய்திகள்