தொட்டில் கட்டி விளையாடிய சிறுவன்... எமனாக வந்து கழுத்தை இறுக்கிய சேலை...
கிருஷ்ணன்கோவில் நாச்சியாபுரம் கிராமத்தில் வசித்து வரும் தனது பெரியம்மாவின் வீட்டிற்கு, சிவகாசியைச் சேர்ந்த 12 வயதான மதுபாலன் சென்ற சிறுவன் விடுமுறைக்காக வந்துள்ளான். இந்நிலையில், தனது பெரியயம்மாவின் வீட்டில் இருந்த மரத்தில் சேலையில் தொட்டில் கட்டி விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் கழுத்தை சேலை இறுக்கியதாக கூறப்படுகிறது. இதில், சிறுவன் பேச்சு, மூச்சு இன்றி கிடந்த நிலையில், உறவினர்கள் சிறுவனை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்....
Next Story