இறந்தநாளாக மாறிய பிறந்தநாள்... இரவில் கேக் வெட்டி கொண்டாடிய பின்... விபரீதத்தை தேடிக்கொண்ட காவலர்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே தனது பிறந்த நாளில் காவலர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்து.
வேப்பூர் அகரம் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று தனது பிறாந்த நாளை குடும்பத்துடன் கொண்டாடிய அவர், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த உளுந்தூர்பேட்டை போலீசார் அவரது சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story