ஆன்லைன் விளையாட்டுக்கு தடை? தமிழக அரசு முக்கிய முடிவு எடுக்கும் என எதிர்பார்ப்பு
சென்னை தலைமை செயலகத்தில் உள்துறைச் செயலாளர் பனீந்திர ரெட்டி தலைமையில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் பற்றிய கருத்துக்களை நேரடியாக பகிர விரும்பும் நிறுவனங்கள் உடன் தனித்தனியே கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது. அதன்படி ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், ஆன்லைன் விளையாட்டு ஆராய்ச்சி நிறுவனங்கள், ஆன்லைன் விளையாட்டு கூட்டமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோர் ருடன் தமிழக அரசின் உள்துறை செயலாளரை தனித்தனியே சந்தித்து கருத்துக்களை தெரிவித்தனர்.இதில் ஆன்லைன் விளையாட்டை ஒழுங்குபடுத்துவது அல்லது தடை செய்வது தொடர்பான கருத்துக்களை உள்துறை செயலாளருக்கு பொதுமக்கள், மாணவர்கள், இளம் தலைமுறையினர் homesesi@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வெள்ளிக்கிழமை வரை அவகாசம் வழங்கப்பட்டது. இன்று மேலும் சில நிறுவனங்களுடன் உள்துறைச் செயலாளர் ஆலோசனையை மேற்கொள்ளவுள்ளார். அதன் பின்னர் ஆலோசனையில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் அனைத்தையும் தொகுத்து அரசு ஒரு முக்கிய முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.