பெற்றோர் திட்டியதால் கழிவறைக்கு சென்று 5ம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு - மதுரையில் அதிர்ச்சி
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மண்ணாடிமங்கலம் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் என்பவரின் மகன் சண்முகவேல், அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 5-ம் வகுப்பு பயின்று வந்தான். இந்நிலையில், தாய், தந்தை திட்டியதால் ஆத்திரமடைந்த சிறுவன், வீட்டின் பின்புறத்தில் உள்ள கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டான். சண்முகவேலின் உடலை போலீசார் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக, சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுவன் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்றோர் திட்டியதால் 10 வயது சிறுவன் தற்கொலை செய்த சம்பவம், மண்ணாடிமங்கலம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story