5 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை...கவுன்சிலர் மீது பாய்ந்த‌ குண்டாஸ்

x

விருத்தாச்சலத்தில் தனியார் பள்ளியில் படிக்கும் 5 வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, அந்த பள்ளியின் நிர்வாகி பக்கிரி சாமி கைது செய்யப்பட்டுள்ளார். விருத்தாச்சலம் நகராட்சியின் 30 வது வார்டு திமுக கவுன்சிலரான இவரை, கட்சியில் இருந்து நீக்கி திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. தற்போது, பக்கிரி சாமி நீதிமன்றக் காவலில் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பக்கிரிசாமி மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராமன் பரிந்துரை செய்திருந்தார். அதனை ஏற்ற ஆட்சியர் பாலசுப்பிரமணியன், குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதுசெய்ய உத்தரவிட்டார். இதையடுத்து, ஆட்சியரின் உத்தரவு நகல், மத்திய சிறையில் உள்ள பக்கிரிசாமியிடம் வழங்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்