காதலுக்கு கண்கள் இல்லை ... இப்போது வயதும் இல்லை போல 19 வயது பெண்ணை மணந்த 40 வயது நபர்
புதுக்கோட்டையில், வீட்டை விட்டு வெளியேறி 40 வயது காதலனை கரம்பிடித்த 19 வயது பெண், பெற்றோருடன் செல்ல மறுப்பு தெரிவித்ததால், போலீசார் கணவனுடன் அனுப்பி வைத்தனர். புதுக்கோட்டை கீரமங்கலம் பகுதியை சேர்ந்த சசிக்குமார் என்பவர், திருப்பூரில் பணிபுரிந்து வந்தபோது, அவினாசி பாளையம் பகுதியை சேர்ந்த கோமதி என்ற பெண்ணுடன் காதல் ஏற்பட்டுள்ளது. இவர்களின் காதலுக்கு பெண்ணின் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால், வீட்டை விட்டு வெளியேறிய கோமதி, கீரமங்கலத்தில் சசிக்குமாருடன் திருமணம் செய்து கொண்டார். இந்த விவகாரம் அறிந்து பெண்ணின் வீட்டார் வரவே, காதல் ஜோடி காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தது.
Next Story