ரயில் என்ஜினுக்கு பின் 25 வயது இளைஞருக்கு நடந்த பயங்கரம்..
ஆவடி அருகே ரயில்வே பணிமனைக்கு வந்த ரயிலின் பெட்டியில் கை, கால் கட்டப்பட்ட நிலையில் இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆவடியை அடுத்த அண்ணனூரில் உள்ள ரயில் பணிமனைக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு வந்த ரயில் என்ஜினை, ரயில்வே ஊழியர்கள் பராமரிக்கச் சென்றனர்.
அப்போது, என்ஜினுக்கு பின்புறம் உள்ள பெட்டியில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் தூக்கில் தொங்கியபடி சடலமாகக் கிடந்தார்.
அவரது கை, கால்கள் கட்டப்பட்டு, வாய் துணியால் கட்டப்பட்டு இருந்தது.
தகவல் அறிந்து வந்த ஆவடி ரயில்வே போலீஸார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்தவரின் கை, கால்கள் கட்டப்பட்டு இருப்பதால், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
அவரைப் பற்றிய விவரம் தெரிந்த பிறகுதான், அவரின் மரணத்துக்கான காரணம் தெரியவரும் என்று ரயில்வே போலீசார் தெரித்துள்ளனர்.