27 வயது இளைஞருடன் 16 வயது சிறுமி..அதிரடி காட்டிய போலீஸ்
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில், குழந்தை திருமணம் நடக்க இருந்ததை போலீசார் தடுத்து நிறுத்தினர். தீவளூர் கிராமத்தை சேர்ந்த அரிகிருஷ்ணன் என்ற 27 வயது இளைஞருக்கும், வண்ணான்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் விருத்தாசலத்தில் திருமணம் நடக்க இருந்தது. இது குறித்து தகவலறிந்த விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், திருமண மண்டபத்துக்கு சென்று திருமணத்தை நிறுத்தினர். பின்னர், சிறுமியை மீட்டு சமூக நல பாதுகாப்பு அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.
Next Story