16 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் உடலை விட்டு வெளியே வந்த உறுப்புகள்.. பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்
டெல்லி ஷாபாத் பகுதியில் 16 வயது சிறுமியை, அவரது ஆண் நண்பர் கொடூரமாக பலமுறை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பான, மருத்துவமனை பிரேத பரிசோதனை அறிக்கையில், 17 பக்க குற்றப்பத்திரிக்கை காவல்துறையுடன் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதில், கொலையாளி சாஹிலின் தாக்குதல்கள் மிகவும் கொடூரமானதாக இருந்ததால், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடல் உள்ளிட்ட உள் உறுப்புகள் வெளியே வந்ததாக பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரிய கல்லைக் கொண்டு போட்டதில், தலைப் பகுதியில் சில எலும்புகள் விரிசல் மற்றும் காயங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவரின் உடலில் உள்ள 16 கத்திகுத்து காயங்களில், தோள்பட்டை முதல் இடுப்பு பகுதி வரை அதிகபட்ச காயங்கள் உள்ளதாகவும், உடலில் பல எலும்புகள் உடைந்த நிலையில் காணப்பட்டதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளிவந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.