ரம்ஜான் தொழுகையை முடித்துவிட்டு பைக்கில் மின்னல் வேகத்தில் பறந்த 16 வயது சிறுவன் - மெட்ரோ தூணில் மோதி துடிதுடித்து பலியான சோகம்

Mute
Mute
Current Time 0:00
/
Duration Time 0:00
Loaded: 0%
Progress: 0%
0%
0:00
Stream TypeLIVE
Remaining Time -0:00
 
Technical info
  • Duration [sec]: 0.000
  • Position [sec]: 0.000
  • Current buffer [sec]: 0.000
  • Downloaded [sec]: 0.000
Issue report sent
Thank you!
x

ரம்ஜான் தொழுகை முடித்துவிட்டு அதிவேகமாக வாகனத்தை இயக்கி வந்த 16 வயது சிறுவன் மெட்ரோ தூணில் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது... சென்னையில் நடந்த இந்த சம்பவத்தின் பின்னணியை விளக்குகிறது இந்த தொகுப்பு...

போக்குவரத்து வாகன விதிகள் கடுமையாக இருக்கும் சூழலிலும் அதை மீறுவதால் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும்? என்பதற்கு உதாரணமாகி இருக்கிறது இந்த சம்பவம்....

வாகனத்தை அதிவேகமாக இயக்கியதால் அதிகாலை நேரத்தில் தன் உயிரை விட்டிருக்கிறான் 16 வயது சிறுவன்... தொழுகைக்கு அனுப்பிய மகனை சடலமாக பார்த்து கதறிக் கொண்டிருக்கிறது அவரது குடும்பம்...

சென்னையை அடுத்த ஆலந்தூரை சேர்ந்தவர் அப்துல் ஆபித். இவரது மகன் முகமது ராயன். 16 வயதான இவர், அங்குள்ள பள்ளியில் ப்ளஸ் ஒன் படித்து வந்தார். இவரும் இவரது நண்பரான முகமது ரீஹன் என்பவரும் ரம்ஜான் தொழுகைக்காக அந்த பகுதியில் உள்ள பள்ளிவாசலுக்கு சென்றிருக்கிறார்கள்.

இருவரும் தலையில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்றுள்ளனர். வாகனத்தை முகமது ராயன் ஓட்ட பின்னால் அமர்ந்திருக்கிறார் முகமது ரீஹன்..

ஜி.எஸ்.டி. சாலையில் இருந்து ஆலந்தூர் மெட்ரோ அருகே சுரங்கப்பாதை வழியாக திரும்பும் போது பிளாட்பாரத்தின் ஓரத்தில் இருந்த கற்கள் மீது மோட்டார் சைக்கிள் ஏறியது. இதில் நிலை தடுமாறி சென்ற இருசக்கர வாகனம் அங்கிருந்த மெட்ரோ ரயில்வே தூணில் மோதினர். இதில் பலத்த காயங்களுடன் இருவரும் விழுந்த நிலையில் தலையில் காயம்பட்ட முகமது ராயன் சம்பவ இடத்திலேயே பலியானார்...

பின்னால் அமர்ந்திருந்த முகமது ரீஹனுக்கு கைகளில் பலத்த காயங்கள் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் முகமது ராயனின் சடலத்தை பார்த்து உறவினர்கள் கதறிக் கொண்டிருக்கின்றனர்....

பள்ளி மாணவர்கள் இருசக்கர வாகனம் பயன்படுத்த தடை இருக்கும் போது விதிகளை மீறி அதிவேகமாக அவர்கள் சென்ற பயணமே இப்போது ஆபத்தில் முடிந்திருக்கிறது...

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேநரேம் சென்னையில் நள்ளிரவில் பைக் சாகசம் மற்றும் ரேஸ் நடப்பதாக வந்த புகாரின் பேரில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது அண்ணாசாலை, தேனாம்பேட்டை, வள்ளுவர் கோட்டம் உள்ளிட்ட இடங்களில் பைக் ரேஸ் மற்றும் சாகசத்தில் ஈடுபட்டதாக 33 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

மேலும் 33 இருசக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்... அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை ஓட்டுதல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணையும் நடந்து வருகிறது...


Next Story

மேலும் செய்திகள்