14 வயது சிறுமிக்கு 40 வயது நபர்..கொடுமை மேல் கொடுமை..தென்காசியில் பயங்கரம்

x

தர்மபுரி அரூர் அடுத்த குடுமியம்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகன்-சித்ராவுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவர்கள், மாதேஷ் என்பவர் மூலம் திருவள்ளூர் சீத்தாஞ்சேரியில் சேகர் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் வேலை செய்ய சென்றனர். முருகன் வசித்த வீட்டிற்கு தென்காசியை சேர்ந்த தாஸ் என்பவர் வந்து, அதிக சம்பளத்துடன் கூடிய நல்ல வேலையை தருவதாகக் கூறியுள்ளார். இதையடுத்து மனைவி மற்றும் குழந்தைகளுடன் தாஸ் வீட்டிற்கு முருகன் சென்றார். அங்கு ஆடு, மாடு, கோழி உள்ளிட்டவைகளை பராமரித்து வந்துள்ளார். முருகனின் மகளான 14 வயது சிறுமியை, தாஸ்-சிரிஜா தம்பதியின் வளர்ப்பு மகனான 40 வயதாகும் ரகு என்பவருக்கு கட்டாய திருமணம் செய்து ஆந்திராவுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில், முருகன், சித்ரா மற்றும் 2 குழந்தைகளை தாஸ் மற்றும் அவரது மனைவி சிரிஜா கொடுமைப்படுத்தியுள்ளனர். அங்கிருந்து குடும்பத்துடன் முருகன் வெளியேற நினைத்தபோது, சிரிஜாவின் அடியாட்கள் தாக்கியுள்ளனர். எனினும் அங்கிருந்து முருகன் மற்றும் அவரது தாயார் தப்பித்து சொந்த ஊருக்கு வந்தனர். தோட்டத்தில் கொத்தடிமைகளாக வேலைபார்க்கும் தனது மனைவி மற்றும் குழந்தைகளை மீட்டுத்தர வேண்டுமென இருவரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்