மனமுடைந்து மரத்தில் தூக்கு போட்ட 10 வயது சிறுமி - புதுச்சேரியில் அதிர்ச்சி
புதுச்சேரியில் 10 வயது குழந்தை, மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
லாஸ்பேட்டை பகுதியில் வசித்து வரும் பாபு-ரேகா தம்பதியினரின் 2வது மகள் ரித்திகா.
இவர் ஒரு விடுதியில் தங்கி, அரசு பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், விடுமுறைக்காக தனது வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது பெற்றோரிடம் கேட்காமல் வீட்டில் இருந்து பணம் எடுத்து கொண்டு தின்பண்டங்கள் வாங்கி உள்ளார்.
இதனை அவரது பெற்றோர் கண்டித்ததால் மனம் உடைந்த ரேகா, தனது வீட்டில் அருகே இருந்த மரத்தில் துணியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
Next Story