இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (19-02-2024) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines

மாணவர்களுக்கும் ரூ.1,000

அரசுப் பள்ளிகளில் பயின்று உயர் கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம்...

சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு...

அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கும் வகையில் புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம்...

---------

வட சென்னை வளர்ச்சி திட்டம்

வடசென்னையில் குடியிருப்புகள், மருத்துவமனைகள், பள்ளிகளை தரம் உயர்த்த ஆயிரம் கோடியில் புதிய திட்டம்...

மூன்றாம் பாலினத்தவரின் கல்லூரி படிப்புக்கான முழுச்செலவையும் அரசே ஏற்கும் என்றும் பட்ஜெட்டில் அறிவிப்பு...

கோவை விளாங்குறிச்சியில் புதிய தகவல் தொழில்நுட்பப் பூங்கா, மதுரை, திருச்சியில் புதிய டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும் எனவும் உறுதி...

---------

"தமிழக பட்ஜெட் - அரசின் கனவு"

நிதி நிலை அறிக்கை நமது அரசின் கனவு... நாளை முதல் அது நனவாக வேண்டும்...

சமூக நீதியை மையமாக கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிக்கை...

பட்ஜெட்டில் மக்களுக்கான திட்டங்கள் எதுவும் இல்லை, வார்த்தை ஜாலம் தான் உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்...

--------

திமுக விருப்ப மனு விநியோகம்

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தி.மு.க. விருப்ப மனு விநியோகம் இன்று தொடக்கம்...

முதல் நாளே ஆர்வமுடன் பெற்றுச்சென்ற நிர்வாகிகள்...

அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் 21ம் தேதி முதல் விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிப்பு...

--------

2 கோடி உறுப்பினர்கள் - த.வெ.க. இலக்கு

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு...

உறுப்பினர் சேர்க்கைக்கு புதிய செயலி விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல்...

--------

திமுக கூட்டணியில் கமல்?

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து, 2 நாட்களில் நல்ல செய்தி...

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று பேட்டி...

தி.மு.க. கூட்டணியில் கமல் இணைய வாய்ப்புள்ளதாக டி.கே.எஸ்.இளங்கோவன் தகவல்...

--------

உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

வாக்குச்சீட்டில் திருத்தம் செய்தது ஏன்?

சண்டிகர் மேயர் தேர்தல் நடத்திய அதிகாரிக்கு உச்சநீதிமன்றம் இன்று சரமாரி கேள்வி...

பதிவான வாக்குச்சீட்டுகளை நாளை சமர்ப்பிக்க உத்தரவு...

---------------


Next Story

மேலும் செய்திகள்