இன்றைய தலைப்பு செய்திகள் (23-03-2023)

x
  • தடை சட்ட மசோதா - மீண்டும் நிறைவேற்றம்
  • தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதா இன்று மீண்டும் நிறைவேற்றம்....
  • மனசாட்சியை உறங்க செய்துவிட்டு, ஆட்சி செய்ய முடியாது என முதலமைச்சர் ஸ்டாலின் ஆவேசம்...
  • பரபரப்புகளுக்கு மத்தியில், டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு...
  • "ஆளுநரை திரும்பப் பெற வேண்டும்"
  • மத்திய அரசு ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் இன்று வலியுறுத்தல்...
  • ஆளுநரை பற்றி பேரவையில் விமர்சனம் செய்ததாக, பாஜக சட்டமன்றக் குழு தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு...
  • அரசியல் சட்டப்படி ஆளுநர் செய்த தவறை விமர்சிப்பது அவரவர் உரிமை என அவை முன்னவர் துரைமுருகன் பதிலடி...
  • ஓபிஎஸ் பேச அனுமதி - ஈபிஎஸ் எதிர்ப்பு
  • சட்டப்பேரவையில் அதிமுக சார்பில் ஓ.பி.எஸ் பேச அனுமதி அளித்ததற்கு, எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு....
  • முன்னாள் முதல்வர் என்ற அடிப்படையில் அனுமதி வழங்கியதாக, சபாநாயகர் அப்பாவு விளக்கம்...
  • ராகுலுக்கு 2 ஆண்டுகள் சிறை
  • பிரதமர் மோடி குறித்த சர்ச்சை பேச்சு தொடர்பான அவதூறு வழக்கில், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை.....
  • சூரத் மாவட்ட நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு...
  • நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்...
  • "மத்திய அரசு செவிசாய்க்க மறுப்பு"
  • அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை என்பதில், எந்த சமரசமும் இல்லை...
  • உறுப்பினர்களின் கோரிக்கைகள் குறித்து மத்திய அரசு செவி சாய்க்க மறுப்பதாகவும் திமுக எம்.பி. திருச்சி சிவா இன்று குற்றச்சாட்டு...


Next Story

மேலும் செய்திகள்