இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (06-12-2022)
ஆரஞ்சு எச்சரிக்கை - அவசர ஆலோசனை
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெற வாய்ப்பு...
தமிழகத்திற்கு நாளை மறுநாள் அதி கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்தது, இந்திய வானிலை மையம்...
முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரம்... சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு மீட்பு குழுவினர் இன்று அனுப்பிவைப்பு...
"ஆன்லைன் சூதாட்ட தடை - கோரிக்கை"
நாளை தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடரில், ஆன்லைன் சூதாட்ட தடை குறித்து விவாதிக்க வேண்டும்...
டெல்லியில் இன்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் வலியுறுத்தியதாக, திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தகவல்...
"கலாசாரத்தை பாதுகாக்கவே ஜல்லிக்கட்டு அனுமதி"
தமிழகத்தின் கலாசாரத்தை பாதுகாக்கவே, ஜல்லிக்கட்டு அனுமதி சட்டம் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று வாதம்...
விலங்கு வதை தடுப்புச் சட்டத்தை இயற்றுவதற்கு சட்டப்பேரவைக்கு அதிகாரமுண்டு என்றும் அதிரடி...
"அரசுக்கு ஒத்துழைக்காத ஆளுநர் தேவையில்லை"
ஆளுநரை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்று வழக்கு தொடர்வது சரியல்ல....
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று கருத்து...
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு ஒத்துழைக்காத ஆளுநர் தேவையில்லை என சீமான் காட்டம்...
ஆசிரியர் நியமனம் - உயர்நீதிமன்றம் உத்தரவு
கல்வி நிறுவனங்களில் நேரில் சென்று படித்தவர்களையே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்...
ஆசிரியர் நியமன நடைமுறையை 3 மாதங்களில் மறு ஆய்வு செய்யவும் சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு...
2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம்
திருவண்ணாமலையில் 2 ஆயிரத்து 668 அடி உயர மலை உச்சியில், இன்று ஏற்றப்பட்டது மகா தீபம்...
அரோகரா கோஷம் விண்ணை பிளக்க, லட்சக்கணக்கான பக்தர்கள் பரவசம்...