இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (03-06-2023) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines
ஒடிசாவில் நிகழ்ந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 288 ஆக உயர்ந்ததாக இன்று அறிவிப்பு...
ஒடிசாவில் நிகழ்ந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 300ஐ கடந்ததாக் இன்று அறிவிப்பு...
விபத்தில் 17 பெட்டிகள் தடம் புரண்டதாக தேசிய பேரிடர் மீட்பு குழு தகவல்...
ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதால், பலி எண்ணிக்கை உயரும் என அச்சம்...
விபத்து நடந்த இடத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று நேரில் ஆய்வு...
படுகாயமடைந்தவர்களை அரசு ஒருபோதும் கைவிடாது என உறுதி...
தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது எனவும் எச்சரிக்கை...
ரயில் விபத்து தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்னவ் பேட்டி...
மீட்புப் பணிகள் நிறைவடைந்து, ரயில் பாதையை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்...
சென்னையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் இன்று நேரில் ஆய்வு செய்தார், முதல்வர் ஸ்டாலின்....
ஒடிசா விரைந்துள்ள அமைச்சர்கள் குழுவுடனும் அவசர ஆலோசனை...
தமிழ்நாட்டில் இன்று துக்க தினமாக அனுசரிப்பு...
விபத்துக்கு முழுக்க முழுக்க அலட்சியமே காரணம் என முன்னாள் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் விமர்சனம்...
ரயில்வே துறையில் முறையான ஒருங்கிணைப்பு இல்லை என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு...