இலவசத்துக்காக உயிரை விட்ட 80 பேர்.. தோண்ட தோண்ட பிண குவியல்கள்.. உலகை உலுக்கிய கோர காட்சி..!
ஏமன் நாட்டுத் தலைநகர் சனாவில் மொயின் பள்ளிக்கு அருகில் உள்ள அல்-குபஸ் சந்தையில் உள்ளூர் வணிகர்களால் ரமலானுக்காக உணவு உள்ளிட்ட இலவச பொருட்கள் விநியோகிக்கப்பட்டன. அவற்றைப் பெறுவதற்காக பள்ளி ஒன்றில் மக்கள் கூட்டம் குவிந்த நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி 80க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியாகினர். மேலும் ஏராளமானோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இலவச பொருட்களை விநியோகித்த 2 வணிகர்களை காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருவதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Next Story