அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடு - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

x

மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை 30 சதவீதமாக உயர்த்த கோரிய மனுவுக்கு பதிலளிக்க மத்திய - மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றப்பட்டது. இந்த இட ஒதுக்கீட்டை, 30 சதவீதமாக உயர்த்த தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி அகில பாரதீய சத்ரிய மகாசபா சார்பில் அதன் தேசிய துணை தலைவர் வெங்கடேசன் பொது நல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில்,

நீட் தேர்வில் தகுதி பெற்ற 2,656 மாணவர்களும் மாணவர் சேர்க்கையை பெறும் வகையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 இட ஒதுக்கீட்டை 30 சதவீதமாக அதிகரிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, மத்திய - மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்