17 நிமிடத்தில் 75 செய்திகள்... காலை தந்தி செய்திகள்

x

ஆளுநருக்கு எதிராக அனைத்து மாநில சட்டமன்றங்களிலும் தனி தீர்மானம் நிறைவேற்ற கோரி பாஜக அரசு அல்லாத மாநில முதலமைச்சர்களுக்கு முதலமைச்சர்

ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் ஆளுநரின் செயல்பாடுகளுக்கு எதிரான தனித்தீர்மானத்தின் நோக்கம் குறித்து விளக்கம் அளித்து முதலமைச்சர் ஸ்டாலின், சட்டமன்றங்களின் இறையாண்மையை நிலைநிறுத்த ஆதரவை வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.


திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கர்நாடக மாநில வருவாய்த்துறை அமைச்சர் அசோக் சாமி தரிசனம் செய்தார். அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மனை தரிசனம் செய்து விட்டு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அசோக், ஒவ்வொரு முறையும் கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலின் போதும் அண்ணாமலையாரை தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டிருப்பதாக கூறினார்.


ஐபிஎல் போட்டியில், சென்னையை 3 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வீழ்த்தியது. முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 6 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் மூன்று ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் த்ரில் வெற்றி பெற்றது. சென்னை அணியின் கேப்டனாக தோனி ஆடிய 200வது போட்டியில் தோல்வி அடைந்தது, ரசிகர்களை வருத்தமடைய செய்தது.


மிடில் ஓவர்களில் ஸ்ட்ரைக் ரொடேட் செய்யாததே தோல்விக்கு முக்கிய காரணம் என சென்னை கேப்டன் தோனி கூறி உள்ளார். மைதானம் பெரிய அளவில் ஸ்பின்னர்களுக்கு உதவவில்லை என்றும், ராஜஸ்தான் அணியில் அனுபவம் வாய்ந்த ஸ்பின்னர்கள் இருப்பதாகவும் கூறினார். பேட்டர்கள்தான் தோல்விக்கு பொறுப்பேற்க வேண்டும் எனக் கூறிய தோனி, கேப்டனாக 200வது போட்டி போன்ற சாதனை நிகழ்வுகளை தான் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை என்றும், அணிக்கு பங்களிப்பதுதான் முக்கியம் என்றும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்