74 வது குடியரசு தின விழா கோலாகலம் - பல்வேறு துறைகளில் இந்தியா-எகிப்து ஒப்பந்தம்

x

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஒடுக்க வலுவான நடவடிக்கைகள் தேவை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நாட்டின் 74 வது குடியரசு தினவிழா இன்று, கொண்டாடப்படுகிறது. இதில், சிறப்பு விருந்தினராக, எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா எல் சிசி பங்கேற்கிறார். இதனை ஒட்டி, இந்தியாவிற்கு 3 நாள் அரசுமுறைப்பயணமாக வந்துள்ள எகிப்து அதிபர் அப்தெலுக்கு பாராம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், டெல்லியில் எகிப்து அதிபரும் இந்திய பிரதமரும் இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

பின்னர் இரு நாடுகளிடையே சைபர் பாதுகாப்பு, கலாச்சாரம், தகவல் தொழில்நுட்பம், இளையோர் விவகாரங்களில் ஒத்துழைப்பு உள்ளிட்ட துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு பரிமாறி கொள்ளப்பட்டன. மேலும் இந்தியா மற்றும் எகிப்து இடையே ராஜாங்க ரீதியிலான உறவு தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவடைந்திருப்பதை குறிக்கும் விதமாக இரு நாடுகளின் சார்பிலும் சிறப்பு தபால் தலைகள் வெளியிடப்பட்டன. பின்னர் செய்தியாளர்களை பிரதமர் மோடி, பயங்கரவாதம் குறித்து இந்தியாவும் எகிப்தும், கவலை கொண்டிருப்பதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்