வாகன ஊர்திகள், சாகசம், நடனம்.. மூவர்ண கொடி ஏற்றிய திரவுபதி முர்மு.. களைகட்டிய குடியரசு தின விழா
74-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, டெல்லி கடமை பாதையில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார்.
டெல்லியில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய பிரதமர் மோடி, குடியரசு தின விழா நடைபெறும் இடத்திற்கு வந்தார்.
அங்கு வந்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை, பிரதமர் மோடி வரவேற்றார்.
பின்னர் தேசிய கீதம் இசைக்க 21 குண்டுகள் முழங்க குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார்.
அப்போது வானில் பறந்த ராணுவ ஹெலிகாப்டர் தேசியக் கொடிக்கு மலர்தூவி மரியாதை செய்தது.
இதைதொடர்ந்து நடைபெற்ற முப்படைகள், குதிரைப்படை, ஒட்டகப்படை, ராணுவ இசைக்குழு, தேசிய மாணவர் படை, நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்களின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார்.
கடமை பாதை முதல் இந்தியா கேட் வரை ராணுவ வீரர்களின் கம்பீர அணிவகுப்பு நடைபெற்றது.