30 நிமிடத்தில் 73 செய்திகள்... காலை தந்தி செய்திகள் | Thanthi Morning News | Speed News (14.05.2023)

x

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்றதையடுத்து, அங்கு கொண்டாட்டங்கள் களை கட்டின. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, டி.கே.சிவக்குமார், சித்தராமையா உள்ளிட்டோர், ஒரே வாகனத்தில் பெங்களூரூவில் உள்ள கட்சி அலுவலகம் வந்தனர். பின்னர் அங்கு தொண்டர்களிடையே இனிப்பு வழங்கி உற்சாகமாக கொண்டாடினர். அப்போது தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கர்நாடகா தேர்தல் முடிவுகள், முந்தைய அரசு எந்த அளவிற்கு திறமையற்றதாக இருந்தது என்பதை காட்டுவதாக, அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடகா மக்கள் நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளதாகவும், அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார். ஒருவர் தோற்றாலும், வெற்றி பெற்றாலும் கட்சி மற்றும் மக்களுடன் இருக்க வேண்டும் எனவும் கார்கே கூறினார்.

காங்கிரஸ் கட்சிக்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை வழங்கிய கர்நாடக மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்... மேலும், முன்னேற்றம் என்ற எண்ணத்திற்கு முன்னுரிமை அளித்த கர்நாடகாவிற்குக் கிடைத்த வெற்றி இது என அவர், குறிப்பிட்டு உள்ளார்.

அமெரிக்காவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணமான கலிபோர்னியாவில் இன பாகுபாடு தடை சட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இது கலிபோர்னியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் வணிக நிறுவனங்கள், அலுவலகங்களில் சம உரிமை வழங்க வழிவகை செய்கிறது. மேலும் நிறவெறி, இன பாகுபாடு அடிப்படையிலான தாக்குதலில் இருந்து வெளிப்படையான பாதுகாப்பையும் அளிக்கிறது. இதன்மூலம் இன பாகுபாடுக்கு எதிரான சட்டத்தை இயற்றிய முதல் மாகாணமாக கலிபோர்னியா உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்