54 நாட்களில் 720 விஷ பாம்புகளை பிடித்த இருளர் இனத்தவர்கள் - மண்பானைகளில் வைத்து காட்சி

x

பாம்பு பிடி தடைக்காலம் முடிந்த 54 நாட்களில் 720 விஷ பாம்புகளை வடநெம்மேலி பாம்பு பண்ணைக்கு பிடித்து வந்து இருளர் இனத்தவர்கள் சாதனை படைத்துள்ளனர்.செங்கல்பட்டு மாவட்டம், வடநெம்மேலியில் தமிழக அரசின் தொழில் வணிகத்துறை சார்பில் பாம்பு பண்ணை செயல்பட்டு வருகிறது. இந்த பாம்பு பண்ணைக்கு பாம்பு பிடிப்போர் கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த, அனுமதி சான்று பெற்ற 350 இருளர் இனத்தவர்கள் பாம்புகளை பிடித்து வழங்கி வருகின்றனர். இந்தநிலையில் பாம்புகளின் இனப்பெருக்க காலத்தை ஒட்டி, இந்த பாம்பு பண்ணையானது மே மாதம் முதல் மூடப்பட்டு, கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி திறக்கப்பட்டது. பண்ணை மீண்டும் திறக்கப்பட்டதற்கு பிறகான கடந்த 54 நாட்களில், பண்ணைக்கு 392 சுருட்டை விரியன்கள், 174 கட்டுவிரியன்கள், 83 கண்ணாடி விரியன்கள் மற்றும் 71 பிற வகை பாம்புகள் என 720 விஷ பாம்புகளை பிடித்து வந்து இருளர் இனத்தவர்கள் சாதனை படைத்துள்ளனர். அங்கு இந்த பாம்புகள் அனைத்தும் மண்பானைகளில் வைத்து பராமரிக்கப்பட்டு காட்சிப்படுத்தபட்டு வருகிறது


Next Story

மேலும் செய்திகள்