71 வயது.. 250 முறை சிறை வாசம்... தேனியில் மாடி வீடு, வணிக வளாகம் - வாயை பிளக்க வைத்த உல்லாச வாழ்க்கை

x

பல்வேறு கொள்ளை சம்பவங்களில் 250 முறை சிறை சென்று, திருடிய பணத்தில் உல்லாசமாக வாழ்ந்து வந்த 71 வயது முதியவரை போலீசார் கைது செய்தனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை பகுதியில் வசிக்கும் பிரகாஷ் என்பவர், குடும்பத்துடன் வெளியே சென்றபோது, அவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 8 சவரன் நகைகள், 70 ஆயிரம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து பிரகாஷ் அளித்த புகாரின்பேரில், சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், திருச்செந்தூர் உடன்குடியில் வசிக்கும் 71 வயதாகும் தங்கமுத்துவை கைது செய்தனர். அவரிடமிருந்து 8 சவரன் நகைகள், 35 ஆயிரம் ரூபாய் பணத்தை கைப்பற்றினர்.

தங்கமுத்து மீது ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் நடந்த திருட்டு வழக்குகளில், 100க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. 250க்கும் மேற்பட்ட முறை சிறை சென்றுள்ளார். திருச்செந்தூரில் ஒரு மாடி வீடு, தேனியில் மாடி வீடு மற்றும் வணிக வளாகம் என தங்கமுத்து உல்லாசமாக வாழ்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்