"7000 அனஸ்தீசியா மருந்துகள்.." - அங்க 30ரூவா... இங்க 300 ரூவா - மருத்துவர்களுக்கு தொடர்பா?

x

புட்டி புட்டியாக பெட்டிகளில் அடுக்கி கடத்திவரப்பட்ட 7000 ஆம்பிள்ஸ் அனஸ்தீசியா ஊசி மருந்து பறிமுதல். எட்டு பேர் கைது. மேலும் சிலருக்கு போலீஸ் வலை.

மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து எவ்வித அனுமதியும் இல்லாமல் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திற்கு கொண்டு கொண்டுவரப்பட்ட ஏழாயிரம் ஆம்பிள்ஸ் அனஸ்தீசியா ஊசி மருந்துகளை போலீசார் கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.

விசாகப்பட்டினத்தில் உள்ள போதை விரும்பிகளுக்கு அறுவை சிகிச்சைக்கு முன் நோயாளிகளை மயக்கம் அடைய செய்ய பயன்படுத்தப்படும் அனஸ்தீசியா ஊசி மருந்துகளை சிலர் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அந்த ஊசி மருந்துகளை வாங்கும் போதை விரும்பிகள் அவற்றை போதை ஏற்றிக்கொள்ள பயன்படுத்தி வந்தனர். இதன் அடிப்படையில் விசாகப்பட்டினத்தில் உள்ள பல்வேறு இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக அதிரடி சோதனை நடத்திய போலீசார் 60 பெட்டிகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 7000 ஆப்பிள்ஸ் அனஸ்தீசியா ஊசி மருந்துகளை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பத்மா ராகவ ராவ், உமா மகேஷ் ஆகியோர் உட்பட எட்டு பேரை கைது செய்துள்ள போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் மேற்குவங்க மாநிலத்தில் முப்பது ரூபாய்க்கு வாங்கும் ஒரு ஆம்பில் அனஸ்தீசியா ஊசி மருந்தை அவர்கள் 300 ரூபாய்க்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. கைது செய்யப்பட்டுள்ள எட்டு பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் இது தொடர்பாக மேலும் சிலரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் டாக்டர்கள் சிலருக்கும் தொடர்பு இருப்பதாக போலீசார் நடத்தி விசாரணை தெரிய வந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்