பிரசித்தி பெற்ற சட்டைநாதர் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட 700 ஆண்டுகள் பழமைவாய்ந்த 22 ஐம்பொன் சிலைகள்
சட்டநாதர் கோயிலில், கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு, யாகசாலை அமைக்க, மேற்கு கோபுர வாயிலில் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது, 22 ஐம்பொன் சிலைகள், 55 பீடம், 100க்கும் மேற்பட்ட செப்பேடுகள், பூஜை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றை பார்வையிட்ட தருமபுர ஆதீனம், எந்த காலத்து சிலைகள் என்பது குறித்து தொல்லியல் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். சிலைகளை ஆய்வு செய்த தொல்லியல் அதிகாரிகள், 700 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிலைகள் என, தெரிவித்தனர். தகவலறிந்து வந்த மயிலாடுதுறை ஆட்சியர் மகாபாரதி, சிலைகளை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என, தருமபுரம் ஆதினத்திடம் கோரிக்கை விடுத்தார். அதை ஏற்க மறுத்த தருமபுரம் ஆதினம், 22 ஐம்பொன் சிலைகளையும் கோயில் வளாகத்தில் வைக்க உத்தரவிட்டார்.
Next Story