சூடானில் இருந்து மீட்கப்பட்ட 70 தமிழர்கள்... தடுப்பூசி சான்று இல்லாமல் வந்த 17 பேர் - அதிகாரிகள் எடுத்த அதிரடி நடவடிக்கை

x

சூடானில் இருந்து மீட்கப்பட்ட திருவாரூர், நாகை, காரைக்கால், தஞ்சை, கிருஷ்ணகிரி, பாண்டி, கடலூர், மதுரை, விழுப்புரம், அரியலூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 70 தமிழர்கள் கொச்சி விமான நிலையம் வந்தனர். கொச்சி விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் நலவாழ்வு துறை ஆணையக துணை இயக்குனர் ரமேஷ் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். இதில் சூடானில் இருந்து வரக்கூடியவர்கள் தடுப்பூசி போட்டதற்கான சான்றுடன் வர வேண்டும். இந்த சான்று இல்லாமல் வந்த 17 பேர் ஒரு வாரத்திற்கு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் மீட்கப்பட்ட 53 பேரை அவர்களது சொந்த ஊர்களுக்கு வேன், கார்களில் அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்