33 நிமிடத்தில் 70 செய்திகள்... காலை தந்தி செய்திகள் | Thanthi Morning News | Speed News (12.05.2023)

x

நிர்வாக காரணங்களுக்காக அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டாலும் தொழில் துறைக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் ஒத்துழைப்பு தொடரும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முன்னதாக சென்னை ஆர்ஏபுரத்தில், அடுத்த 10 ஆண்டுகளில், 20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு அரசுக்கும் - ஹூண்டாய் நிறுவனத்திற்கும் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ளது

முதலமைச்சரின் எண்ண ஓட்டங்களுக்கு ஏற்ப எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் தமிழ்நாட்டை தொடர்ந்து முன்னிலை மாநிலமாக உயர்த்துவோம் என அமைச்சராக பொறுப்பேற்ற டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார். தலைமை செயலகத்தில் அவருக்கென ஒதுக்கப்பட்டுள்ள அலுவலக அறையில் கோப்புகளில் கையெழுத்திட்டு அமைச்சராக பொறுப்பேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்தபோது இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், விரைவில் அதிமுகவில் சேர வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். சென்னை ராயபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ஆவடி நாசரும் அதிமுகவில் இணைய வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.

ஆளுநரை பதவி நீக்கம் செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர வேண்டும் என மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார். ஆளுநர் பதவியில் நீடிப்பதை அனுமதிக்க முடியாது என்றும், உள்துறை அமைச்சரிடம் புகார் அளிக்கப்பட்டதாகவும், ஆளுநரின் நடவடிக்கைக்கு பின்னால் மத்திய அரசு உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்