33 நிமிடத்தில் 70 செய்திகள்... காலை தந்தி செய்திகள் | Thanthi Morning News | Speed News (11.05.2023)

x

புதிய அமைச்சராக டிஆர்பி ராஜா இன்று பதவியேற்க உள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவி அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார். ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்ற 2 ஆண்டுகளில், மூன்றாவது முறையாக அமைச்சரவை மாற்றம் நடைபெறுகிறது. டிஆர்பி ராஜா-விற்கு எந்த துறை ஒதுக்கப்பட்டுள்ளது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

மின்வாரிய அலுவலர்களுக்கும் ஊழியர்களுக்கும் 6 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது.இந்த ஊதிய உயர்வின் மூலம் 75 ஆயிரத்து 978 பேர் பயன்பெறுவார்கள். இதேபோல், 1.12.2019-ஆம் தேதியன்று 10 ஆண்டுகள் பணி முடித்த ஊழியர்களுக்கும் அலுவலர்களுக்கும் பணிப் பலனாக 3 சதவீத ஊதிய உயர்வு வழங்குவது என்றும் உடன்பாடு எட்டப்பட்டது. இந்த ஊதிய உயர்வு மூலம் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு ஆண்டுக்கு 527 கோடியே 8 லட்ச ரூபாய் கூடுதல் செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவின் வளமான எதிர்காலத்துக்காக, பெருந்திரளாக வந்து வாக்களித்த மக்களுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நன்றி தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சிறப்பாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட காங்கிரஸ் தலைவர்கள், சிங்கம் போன்ற கட்சித் தொண்டர்களுக்கும் நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார்.

கர்நாடகாவில் வாக்குப்பதிவு நேரம் முடிவடைவதற்குள் மின்னணு இயந்திரங்களை தேர்தல் அதிகாரிகள் எடுத்துச் செல்வதாக நினைத்து கிராம மக்கள் ரகளையில் ஈடுபட்டனர். தேர்தல் அதிகாரிகளை தாக்கியதோடு மின்னணு இயந்திரங்கள், விவிபேட் இயந்திரங்களை சேதப்படுத்தினார்கள். இந்த வன்முறை தொடர்பாக 23 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்