இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (26-10-2023) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines

x

பா.ஜ.க. நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி மேலும் ஒரு வழக்கில் கைது...

செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவின் போது முதலமைச்சர் புகைப்படத்தினை அகற்றியதாக வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் நடவடிக்கை...

அமர் பிரசாத் ரெட்டியை மேலும் ஒரு வழக்கில் கைது செய்தது நுங்கம்பாக்கம் காவல்துறை...

வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் போக்குவரத்து உதவி ஆய்வாளரிடம் தகராறு செய்தது தொடர்பாக நடவடிக்கை...

"டாஸ்மாக் பார் டெண்டரை எதிர்த்த வழக்குகளில் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை டெண்டர் முடிவுகளை அறிவிக்க கூடாது..."

டாஸ்மாக் நிர்வாகத்துக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...

ராஜ்பவன் தாக்குதல் குறித்த புகாரை காவல்துறை பதிவு செய்யவில்லை...

தன்னிலையாக பதிவு செய்யப்பட்ட புகார், தாக்குதலை சாதாரண செயலாக நீர்த்துபோக செய்து விட்டது என்றும் ஆளுநர் மாளிகை குற்றச்சாட்டு...

அவசர கதியில் கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது...நீதிபதியை நள்ளிரவில் எழுப்பி குற்றம் சாட்டப்பட்டவர் சிறையில் அடைக்கப்பட்டார்..."

பின்னணியில் உள்ளவர்களை அம்பலப்படுத்த கூடிய விரிவான விசாரணை தவிர்க்கப்பட்டுள்ளது என்றும் ஆளுநர் மாளிகை குற்றச்சாட்டு...


Next Story

மேலும் செய்திகள்