Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (04-12-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (04-12-2022) | Morning Headlines | Thanthi TV
x

வருகிற 8 மற்றும் 9ஆம் தேதிகளில் தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாடு...9ம் தேதி காலநிலை மாற்ற இயக்கத்தை தொடங்கி வைக்கிறார், முதலமைச்சர் ஸ்டாலின்

பொங்கல் பண்டிகைக்கு, ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும்....தமிழக அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தல்....

கட்சிக்கு விசுவாசமாக இருந்தால் எளிதாக பதவி கிடைக்காது, அதை ஜீரணித்துக் கொண்டுதான் கட்சியில் இருக்க வேண்டும்....பதவி கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம் நியாயம் தான் என திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ். பாரதி பரபரப்பு பேச்சு...

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில், பசுமை வெளி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 130ஆவது நாளாக நீடிக்கும் போராட்டம்....குளிர், பனியை பொருட்படுத்தாமல் முதியோர், பெண்கள் பங்கேற்பு...

தமிழகத்தில் 2 கோடி குடும்பங்களில்,7 லட்சம் குடும்பங்களுக்கு மட்டுமே 100 சதவிகித சொத்து வரி உயர்வு...நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்...

தமிழக சட்டப்பேரவையை ஆளுநர் அலட்சியப்படுத்துவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றச்சாட்டு....மதச்சார்பின்மைக்கு எதிரானவர் என்றும் விமர்சனம்...

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு ஆளுநர் கையெழுத்திடாதது பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது...பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி...

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், தீபத் திருவிழாயொட்டி தேர் பவனி கோலாகலம்...Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (04-12-2022) | Morning Headlines | Thanthi TV

அம்பாள் தேரின் வடம்பிடித்து பெண்கள், குழந்தைகள் வழிபாடு...


Next Story

மேலும் செய்திகள்