Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (03-11-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (03-11-2022) | Morning Headlines | Thanthi TV
x

சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலினுடன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்திப்பு...மரியாதை நிமித்தமான சந்திப்பு எனவும் அரசியல் பேசவில்லை எனவும் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்...

முதல்வர் ஸ்டாலினுக்கு கொல்கத்தா இனிப்பு வகைகளை வழங்கினார், மம்தா பானர்ஜி...சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் நடந்த சந்திப்பின்போது, கனிமொழி எம்.பி.க்கும் இனிப்பு வழங்கினார்...

10 ஆண்டு கால ஆட்சியில் சென்னை மட்டுமின்றி தமிழகத்தையே அதிமுக சீரழித்து விட்டதாக முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு...ஒன்றரை ஆண்டுகளிலேயே சரி செய்து விடுவோம் எனவும் உறுதி...

அதிமுக அரசை குறை கூறாமல் மழையால் பாதிக்கப்படும் மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்...முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்...

சென்னையில் மழை நீர் தேங்காததற்கு பொதுமக்கள் பாராட்டுவதாக அமைச்சர் எ.வ. வேலு பெருமிதம்...2 நாள் மழைக்கே அதிமுக விமர்சிப்பதாகவும் குற்றச்சாட்டு...

டி 20 உலக கோப்பை போட்டியில் வங்க தேசத்தை வீழ்த்தியது, இந்திய அணி...அரை இறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்துவதற்காக, இன்று தென் ஆப்பிரிக்காவுடன் மோதுகிறது, பாகிஸ்தான் அணி...

அவதார் இரண்டாம் பாகத்தின் டிரெய்லர் வெளியானது...சினிமா ரசிகர்கள் ஆச்சரியம்... டிசம்பர் 16ம் தேதி படம் திரைக்கு வருகிறது....


Next Story

மேலும் செய்திகள்