29 நிமிடத்தில் 67 செய்திகள்...காலை தந்தி செய்திகள் | Thanthi Morning News | Speed News (27.05.2023)

x

2வது நாளாக வருமான வரித்துறை சோதனை துவங்குவது குறித்து கரூர் வருமான வரித்துறை அலுவலகத்தில் அதிகாரிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். சின்னாண்டாங்கோவில் பகுதியில் அமைந்துள்ள அலுவலகத்தில் நூற்றுக்கணக்கான அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். காந்திகிராமம், சின்னாண்டாங்கோவில் ஏசி காலனியில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதால் அந்த இடங்களில் மீண்டும் சோதனை நடத்த வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

வருமான வரித்துறை அதிகாரிகள் எத்தனை நாட்கள் சோதனை நடத்தினாலும் முழு ஒத்துழைப்புத் தரத் தயார் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வருமான வரித்துறை கேட்கும் ஆவணங்களை நிச்சயம் வழங்குவோம் என்றார். எனது இல்லம் தவிர, என் சகோதரர், நண்பர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை என அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் அளித்தார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீதான தேர்தல் வழக்கில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் விசாரணை நடத்திய மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர், சேலம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர்.

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் ஜூனில் பயன்பாட்டுக்கு வரும் என அமைச்சர் சாமி நாதன் உறுதிபட தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அத்திக்கடவு-அவிநாசி திட்டப்பணிகள் 99 சதவீதம் முடிவடைந்து உள்ளதாக கூறினார். முன்னதாக நீரேற்று நிலையங்களை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் உடன் இணைந்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு செய்தார்.


Next Story

மேலும் செய்திகள்