35 நிமிடத்தில் 66 செய்திகள்... காலை தந்தி செய்திகள்

x

கொள்கை என்பது வேறு, கூட்டணி என்பது வேறு என அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை மயிலாப்பூரில் அதிமுக சார்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் இயக்கம் அதிமுக என்று தெரிவித்தார். மேலும் கொள்கை வேறு, கூட்டணி வேறு என்று தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, அதிமுகவில் கொள்கை என்பது இன்சியல் போன்றது என்று தெரிவித்தார். அரசியல் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு கூட்டணி அமைப்போம் என்றும் கூறினார்.

தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 38 டிகிரி செல்சியசாக இருக்கக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்தில், வரும் ஆகஸ்ட் மாதம் 20-ஆம் தேதி மதுரையில் அதிமுக மாநில மாநாடு நடத்துவது உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், திமுகவுடன் ரகசிய உறவு வைத்துக் கொண்டு அதிமுகவுக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு பாடம் புகட்டுவோம் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கர்நாடக பாஜகவின் ஊழல் பட்டியலையும் அண்ணாமலை வெளியிட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். மேலும், சொத்துப்பட்டியல் விவகாரத்தில் வருமானவரித்துறை, அமலாக்கத்துறை மூலம் அண்ணாமலை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என்றும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்