29 நிமிடத்தில் 66 செய்திகள்...காலை தந்தி செய்திகள் | Thanthi Morning News | Speed News (06.07.2023)

x

தமிழகத்திற்கு தர வேண்டிய காவிரி நீரின் அளவை கர்நாடக அரசு குறைத்து கொண்டே செல்வதாக, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய அவர், இம்மாதம் 3ம் தேதி வரை, 12.213 டி எம்சி தண்ணீர் கிடைத்திருக்க வேண்டும் என்றும், ஆனால் 2.993 டிஎம்சி தண்ணீரை மட்டுமே வழங்கி உள்ளதாகவும் கூறினார். டெல்டா விவசாயிகளை காக்க உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

அண்ணாமலை பற்றியோ, அ.தி.மு.க பற்றியோ பயப்பட வேண்டியதில்லை என அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்ணாமலை இருப்பை காட்டிக்கொள்ளவே பேசிவருவதாக கூறினார். கருணாநிதி, ஸ்டாலினை திட்டினால் பத்திரிகைகளில் வரும் என பேசுகிறார்கள் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

மருந்து கசிவு, செலுத்தப்பட்ட மருந்துகள் காரணமாகவோ அல்லது மருத்துவர்களின் தவறான சிகிச்சையினாலோ குழந்தையின் கை அகற்றப்படவில்லை என மருத்துவமனை நிர்வாகம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது. குழந்தையின் கைப்பகுதியில் ரத்தநாளங்களில் அடைப்பு இருப்பது உரிய சிகிச்சையின் மூலம் உறுதிசெய்யப்பட்டது. ரத்தநாள அடைப்பால்தான் கையின் தசைகள் முற்றிலும் செயலிழந்தன என அறிக்கையில் கூறப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் மருத்துவ படிப்பிற்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதற்கு, முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர் கண்டனம் தெரிவித்துள்ளார். கல்வி கட்டண உயர்வு ஏழை, எளிய மாணவர்களை பாதிக்கும் என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சீரமைக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளதாகவும் கூறினார். கட்டணத்தை உயர்த்தியதே சுகாதார அமைச்சகத்தின் சாதனை எனவும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் விமர்சித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்