இருமல் மருந்து சாப்பிட்ட 66 குழந்தைகள் பலி... Maiden நிறுவனம் மருந்து உற்பத்தி செய்ய தடை

x

காம்பியாவில் இருமல் மருந்து சாப்பிட்ட 66 குழந்தைகள் பலியான விவகாரத்தில் Maiden Pharma நிறுவனத்திற்கு மருந்துகளை தயாரிக்க அரியானா அரசு தடை விதித்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் நடப்பது என்ன...? என்பதை அலசுகிறது இந்த தொகுப்பு

காம்பியாவில் இருமல் மருந்து குடித்து 66 குழந்தைகள் பலியான சம்பவம் ஒட்டுமொத்த மனித குலத்தையே உலுக்கியது.

குழந்தைகள் இறப்புக்கு மெய்டன் ஃபார்மாசுட்டிகல்ஸ் நிறுவனம் தயாரித்த 4 இருமல் மருந்துகளுக்கு தொடர்பு இருக்கலாம் என விசாரணையை தொடங்கிய உலக சுகாதார அமைப்பு, அந்த மருந்துகள் விற்பனையை நிறுத்த அறிவுறுத்தியது.

நிறுவனம் சோனிபட்டில் அமைந்திருக்கும் நிலையில் அரியானா அரசும் விசாரணையை தொடங்கியது. இந்த சர்ச்சையை தொடர்ந்து மருந்துகள் ஏற்றுமதி அமைப்பான Pharmexcil, மெய்டன் ஃபார்மாசுட்டிகல்ஸ் நிறுவனத்தின் உறுப்பினர் அங்கீகாரத்தை நிறுத்தியது.

அரியானா மாநில மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பும் அந்த நிறுவனத்திற்கு நோட்டீஸ் வழங்கியது. இருமல் சிரப் தயாரிப்பிற்கான மூலப்பொருட்களை நிறுவனம் தர பரிசோத னை செய்யவில்லை என நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.

இந்த நிலையில் அரியானா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அணில் விஜ் பேசுகையில், உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ள 3 மருந்துகளின் மாதிரிகள் கொல்கத்தாவில் உள்ள மருந்துகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள் ளன; ஆய்வு முடிவு இன்னும் வரவில்லை எனக் கூறினார்.

இருப்பினும் மத்திய மற்றும் மாநில அரசுகள் தரப்பில் செய்யப்பட்ட ஆய்வில், மருந்துகள் உற்பத்தியில் 12 குறை பாடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன என்றும் நிறுவனத்தின் மொத்த உற்பத்தியை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

இதுகுறித்து விசாரணை செய்யப்படும் என மத்திய சுகாதார அமைச்சகத்தின் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பும் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்