வயிற்று வலியில் துடித்த பசு.. அறுத்து பார்த்து அதிர்ந்த டாக்டர் - அள்ள அள்ள வந்த 65 கிலோ பிளாஸ்டிக்
பசு மாட்டின் வயிற்றில் இருந்த, 65 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை, கால்நடை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். மதுரை, வடக்கு மாசிவீதி பகுதியை சேர்ந்தவர் பரமேஸ்வரன்.
இவருக்கு சொந்தமான, பசு மாட்டின் வயிறு வீங்கிய நிலையில் காணப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அவர் கால்நடை மருத்துவமனையை அணுகியுள்ளார்.
அப்போது, பசு மாட்டின் வயிற்றுப் பகுதியை ஸ்கேன் செய்து பார்த்தபோது, ப்ளாஸ்டிக் குப்பைகள் இருப்பது தெரியவந்துள்ளது.
இதனிடையே, இதை கால்நடை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.
Next Story