29 நிமிடத்தில் 64 செய்திகள்... காலை தந்தி செய்திகள்

x

கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலனை இன்று தொடங்குகிறது. கா்நாடகாவில் ஒட்டுமொத்தமாக 3 ஆயிரத்து 632 பேர் 5 ஆயிரத்து 102 மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இதில் 3 ஆயிரத்து 327 ஆண்களும், 304 பெண்களும், ஒரு திருநங்கையும் அடங்குவர். ஒட்டுமொத்தமாக ஆயிரத்து 720 சுயேச்சைகளும், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் ஆயிரத்தி 7 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனுக்களை வாபஸ் பெற வருகிற 24ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு கனகபுரா தொகுதியில், காங்கிரசின் கர்நாடகா மாநில தலைவரு டி.கே. சிவக்குமாரின் சகோதரர் டி கே சுரேஷ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். டி.கே.சிவகுமார் மீதான சொத்து குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளதால்,அவரது வேட்பு மனு நிராகரிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. முன்னெச்சரிக்கையாக அவரது சகோதரரும் காங்கிரஸ் எம்.பி.யுமான டி.கே.சுரேஷ் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் புலிகேசி நகர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக போட்டியிடும் என அறிவிப்பு வெளியானது. அதன் படி, அதிமுகவின் எடப்பாடி தரப்பு வேட்பாளர் அன்பரசன் வேட்பு மனு தாக்கல் செய்தார். கர்நாடக மாநில செயலாளர்எஸ்.டி.குமார் மற்றும் வேட்பாளர் அன்பரசன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் உடன் சென்ற வேட்பாளர் அன்பரசன், தேர்தல் அலுவலரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

Next Story

மேலும் செய்திகள்