21 நிமிடத்தில் 62 செய்திகள்...காலை தந்தி செய்திகள் | Thanthi Morning News | Speed News (29.04.2023)

x

கர்நாடகா மாநிலத்தில், பிரதமர் மோடி இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளவிருக்கிறார். பெங்களூரு நகரில் சாலை மார்க்கமாக, ஊர்வலமாகச் சென்று பிரதமர் மோடி வாக்கு சேகரிக்கிறார். நேற்றைய தினம், மோடியின் உருவ ஒற்றுமை கொண்ட சதானந்த் நாயக் என்பவர், தாவண்கரே நகரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். பிரதமர் மோடி போன்ற உருவ ஒற்றுமை கொண்ட சதானந்த் உடன் பொதுமக்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

முதல்வர் ஸ்டாலின் அழைப்பை ஏற்று, சென்னை கிண்டி பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழாவில் கலந்து கொள்ள குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சம்மதம் தெரிவித்துள்ளார்.

டெல்லி சென்றிருந்த முதலமைச்சர் ஸ்டாலின் குடியரசு தலைவரை நேரில் சந்தித்து, இந்த அழைப்பை விடுத்தார். மேலும் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு அடங்கிய புத்தகத்தை குடியரசு தலைவருக்கு பரிசாக வழங்கினார்.


ரேஷன் கடைகளில் வாங்காத பொருளுக்கு பில் போடுதல் அல்லது குறுஞ்செய்தி வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவு சங்க பதிவாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அனைத்து மண்டல பதிவாளர்களுக்கு அவர் விடுத்துள்ள சுற்றறிக்கையில், ரேஷன் பொருட்கள் கள்ளச்சந்தையில் விற்கப்பட்டால் சம்பந்தப்பட்ட நியாயவிலைக்கடைப் பணியாளர்கள் மீது நடவடிக்கை பாயும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மே 1-ஆம் தேதி, உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் மதுபான கடைகளுடன் இணைந்த அனைத்து மதுகூடங்களுக்கும், விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அறிவிப்பை பின்பற்றாத பட்சத்தில், நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்