30 நிமிடத்தில் 61 செய்திகள்... காலை தந்தி செய்திகள் | Thanthi Morning News | Speed News (06.06.2023)
முதலீட்டாளர்கள் நாம் கேட்பதாலோ அல்லது நாம் சென்று பேசுவதாலோ வரமாட்டார்கள் என உதகையில் நடைபெற்ற துணைவேந்தர் மாநாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து தெரிவித்துள்ளார். மாநிலத்தில் முதலீடுகளை ஈர்க்கும் சூழலை உருவாக்க வேண்டும் என குறிப்பிட்ட அவர், திறமையான மனித வளத்தை உருவாக்குவது அவசியமான அம்சம் என்று கூறினார்.
ஒடிசா ரயில் விபத்து சம்பவம் தொடர்பாக முதலமைச்சரை சந்தித்து விரிவாக விளக்க உள்ளதாக, சென்னை திரும்பிய தமிழ்நாடு அரசின் அதிகாரிகள் குழு தெரிவித்துள்ளது. சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த குழுவினர், தமிழர்கள் யாருக்கும் பாதிப்பில்லை என்றும், அனைவரும் நலமுடன் இருப்பதாக கூறினார்கள்.
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் இறப்புச் சான்றிதழாக, ரயில்வே, காவல் துறை அல்லது மத்திய, மாநில அரசுகளால் அளிக்கப்படும் சான்றிதழ்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என்று எல்ஐசி ஆயுள் காப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து எல்ஐசி தலைவர் சித்தார்த் மொஹந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், நிதி நிவாரணம் வழங்குவதற்கு உரிமை கோரல் தீர்வுகள் விரைவுபடுத்தப்படும் என்றார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில், கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி இசையரங்கம், நாட்டிய அரங்கம் உள்ளிட்டவை நடைப்பெற்றது. விழாவில் பேசிய திமுக எம்பி கனிமொழி, முன்னாள் முதல்வர் கருணாநிதி ஊடகத்தினரை திறம்பட எதிர் கொள்வார் என்றும் உட்கார இடமில்லாம் நின்று கொண்டிருந்த செய்தியாளரை அழைத்து, தனது இருக்கையில் இடம் வழங்கியவர் என்பதை கனமொழி நினைவுகூர்ந்து பேசினார்.