வேலையிழந்த 6000 பத்திரிகையாளர்கள் 200க்கும் அதிகமான வழக்குகள் - என்ன காரணம்..? விவரிக்கும் பகீர் பின்னணி
தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து 50 சதவீதத்திற்கும் அதிகமான பத்திரிகையாளர்கள் வேலை இழந்துள்ளதாக அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிட்டத்தட்ட 53 சதவீத பத்திரிகையாளர்கள் வேலை இழந்துள்ளதாகவும், நிதி பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 50 சதவீத ஊடக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பெரும்பாலான ஊடகவியலாளர்கள் ஆப்கானை விட்டே வெளியேறி விட்டதாகவும், பத்திரிகையாளர்கள் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை தலிபான் அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் பத்திரிகையாளர்களுக்கு எதிராக 200க்கும் அதிகமான வழக்குகள் பதியப்பட்டுள்ளன. கைது நடவடிக்கை, அச்சுறுத்தல், தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்களும் தொடர்ந்து வருகின்றன. ரேடியோ, தொலைக்காட்சி நிறுவனங்கள் பல மூடுவிழா கண்டதுடன் 6000க்கும் அதிகமான பத்திரிகையாளர்கள் பணியிழந்து தவிக்கின்றனர். அதிலும் பெண் பத்திரிகையாளர்கள் இருமடங்கு அதிக பாதிப்பையும் ஆபத்துகளையும் எதிர்கொண்டு வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.