குஜராத் டூ ராமேஸ்வரம்..சைக்கிள் RIDE..வியக்க வைத்த 60 வயது முதியவர் - இளசுகளை அசர விட்ட தாத்தா
- குஜராத்தை சேர்ந்த முதியவர் ஒருவர், ராமேஸ்வரம் கோயிலுக்கு வருவதற்காக, சைக்கிளில் சுமார் 2 ஆயிரம் கிலோமீட்டர் பயணம் செய்துள்ளார்.
- உதய்சிங் என்ற சிவபக்தரான இவர், ராமேஸ்வரம் ராமநாத சாமி கோயிலுக்கு வருகை தர வேண்டும் என்பதற்காக, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 20-ஆம் தேதி, தனது பயணத்தை சைக்கிளில் தொடங்கியுள்ளார்.
- அங்கிருந்து சுமார், இரண்டாயிரம் கிலோமீட்டருக்கும் அதிகமாக சைக்கிளில் பயணம் செய்த இவர், ராமநாதபுரம் மாவட்டத்தை வந்தடைந்துள்ளார்.
- மேலும், இன்று மாலை ராமேஸ்வரம் கோயிலை அவர் சென்றடையவுள்ளார்.
Next Story