60 வகையான மலர் விதைகள் ... 4 லட்சம் மலர் நாற்று நடவு ... | Nilgiri | Thanthi TV
உதகை தாவரவியல் பூங்காவில் இரண்டாம் சீசனுக்கான மலர் நாற்று நடவு செய்யும் பணி தொடங்கியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில், ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் இரண்டாவது சீசன் தொடங்கும். அதன்படி, நடப்பாண்டு சீசனுக்காக உதகை தாவரவியல் பூங்காவில் சுமார் 4 லட்சம் மலர் நாற்று நடவு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் அம்ரித் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட சுமார் 60 வகையான மலர் விதைகள் நடவு செய்யப்பட்டு வருகிறது.
Next Story