இதுக்கு 60.. அதுக்கு 15.. லஞ்சத்தை உரிமையுடன் கேட்கும் அரசு அதிகாரி.. ரகசிய கேமராவில் சிக்கிய வீடியோ
ஒப்பந்ததாரரிடம் ஒப்பந்த தொகையை வழங்க பொதுப்பணி துறை அதிகாரி பேரம் பேசி லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் உலா வருகிறது. மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு பள்ளியில் கழிவறை கட்டிக்கொடுத்தது தொடர்பாக முருகன் என்பவருக்கு பொதுப்பணித்துறை 6 லட்சம் ரூபாய் பாக்கி வழங்கவேண்டியிருந்துள்ளது. அதனை வழங்க பொதுப்பணி துறையின் கட்டிட பிரிவு செயற்பொறியாளர் ரமேஷ் குமார் 75 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார். இதனை தொடர்ந்து முதல் கட்டமாக 50 ஆயிரம் ரூபாய் பணத்தை ராமேஷ் குமாரிடம் கொடுத்த முருகன் அதனை ரகசிய கேமராவில் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
Next Story