பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர்... வாகனங்களை மீட்டுத்தர ரூ.10,000 லஞ்சம்? காவல் அதிகாரி பணம் வாங்கியதாக பரவி வரும் ஆடியோ

x

குளித்தலை அருகே சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை மீட்க காவல் அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்த‌தாக ஆடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இடையப்பட்டி செம்மேடு பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை பிடித்த போலீசார், 3 பைக்குகளை பறிமுதல் செய்துள்ளனர். அவர்களில் ஒருவர், உதவி கேட்டு செல்போனில் பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது. அதில், போலீசாருக்கு பணம் கொடுத்துவிட்டு முன்னாள் எம்எல்ஏ ராமர் என்பவரின் ஓட்டுநர் மூலம் சீட்டாட்டம் நடத்துவதாக கூறுவது இடம் பெற்றுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பைக்குபளை மீட்க காவல் அதிகாரி கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு பத்தாயிரம் ரூபாய் வழங்கியதாகவும், ஆனால், வாகனங்களை தராமல் பணி மாறுதல் ஆகி சென்றதாகவும் பேசுவதும் இடம் பெற்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்