#JUSTIN | சாலை விபத்தில் உடல் நசுங்கி 6 பேர் பலி - ஆந்திராவில் பரபரப்பு

x
  • ஆந்திராவில் சாலை விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு - 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்
  • அன்னமையா மாவட்டம் புள்ளம்பேட்டை அருகே அரசுப்பேருந்து மீது லாரி மோதி விபத்து
  • பேருந்து பயணிகளில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழப்பு
  • படுகாயம் அடைந்த 10-க்கும் மேற்பட்டோர், ராஜம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதி
  • அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்து. ஆறு பேர் பலி. 10 பேர் படுகாயம்.

திருப்பதி, கடப்பா தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது விபத்து பற்றி தகவல் அறிந்து அங்கு வந்து சேர்ந்த புள்ளம்பேட்டை போலீசார் படுகாயம் அடைந்தவர்களை ஆந்திர மாநிலம் அன்னமையா மாவட்டம் புள்ளம்பேட்டை அருகே இன்று மாலை அரசு பேருந்து மீது லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் பேருந்தில் பயணித்த ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்து ராஜம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடப்பாவில் இருந்து திருப்பதிக்கு பயணிகளுடன் சென்று கொண்டிருந்த ஆந்திர மாநில அரசு பேருந்து மீது புள்ளம்பேட்டை அருகே சிமெண்ட் லோடு ஏற்றி சென்று கொண்டிருந்த லாரி பயங்கர வேகத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் பேருந்தின் ஒரு பகுதி முழுவதுமாக நொறுங்கி அதில் பயணித்த ஆறு பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்..மேலும் 10 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து பற்றி தகவல் அறிந்து அங்கு வந்து சேர்ந்த புள்ளம்பேட்டை போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ராஜம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர் லாரியை அதன் டிரைவர் வேகமாக ஓட்டி சென்றதே விபத்திற்கான காரணம் என்று போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்து காரணமாக திருப்பதி, கடப்பா தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது


Next Story

மேலும் செய்திகள்