காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (22-02-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

x

மின்சார வாரியம் ஒருபோதும் தனியார்மயமாகாது....

சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு திட்டவட்டம்.....

-------------

அரசுப் பணிகளில், வன்னியர்கள் 12.5 சதவீதம் இருக்கும்போது, குறைவாக 10.5 சதவீத தனி இட ஒதுக்கீடு கேட்பது ஏன்?......

பாமகவுக்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் கேள்வி......

-----------

சென்னை மாநகராட்சியின் எல்லையைத் தெரிந்து கொள்ளும் விதமாக இசிஆர், ஓஎம்ஆர், ஜிஎஸ்டி சாலைகள் உள்ளிட்ட ஐந்து இடங்களில், நுழைவு வாயில்கள் அமைக்கப்படும்.....

சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் மேயர் பிரியாராஜன் அறிவிப்பு.....

------------

புதுச்சேரியில் இன்று இடைக்கால

இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் முதல்வர் ரங்கசாமி.......

முக்கிய அறிவிப்புகள் இருக்கும் என எதிர்ப்பார்ப்பு........

------------

கரும்பு கொள்முதல் விலை 340-ரூபாயாக உயர்வு......

டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்......

------------

விவசாயிகளின் 'டெல்லி சலோ' பேரணி 2 நாட்களுக்கு நிறுத்திவைப்பு...

அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து வெள்ளிக்கிழமை மாலை முடிவு செய்யப்படும் என விவசாய சங்க தலைவர் சர்வான் சிங் பாந்தர் தகவல்...

-----------

விவசாயிகள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் சுப்கரன் சிங் என்ற இளம் விவசாயி உயிரிழப்பு என தகவல்...

எந்த விவசாயியும் உயிரிழக்கவில்லை, வதந்தி பரப்பப்படுவதாக அரியானா போலீசார் மறுப்பு...

---------------

தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை 2024-யை வெளியிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்...

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையால் தயாரிக்கப்பட்ட கொள்கை வெளியீடு...

---------------

தமிழக காங்கிரஸ் தலைவராக அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றார், செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ.,..

தமிழகத்தில் ஆட்சி அமைக்க அஸ்திவாரம் போடுவோம் என சூளுரை.....

---------------

திருநாவுக்கரசர் ஒரு சாவி கொடுத்து பொறுப்பை ஒப்படைத்தார், நான் ஒரு சாவிக் கொத்தை செல்வப்பெருந்தையிடம் தந்துள்ளேன்......

தலைவர் பொறுப்பை வாங்கிய மகிழ்ச்சியோடு திருப்பி அளிப்பதாக கே.எஸ்.அழகிரி கருத்து.......

---------------

இளைஞர்கள், பெண்களுக்கு தகுந்த பொறுப்பு கொடுக்க வேண்டும்...

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு ஜோதிமணி எம்.பி. கோரிக்கை...

--------------

அதிமுக சுயமாக முடிவு எடுத்து செயல்படவே, தேசிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை....

அதிமுக தலைமையிலான கூட்டணி, பிரம்மாண்டமாக இருக்கும் எனவும் ஈ.பி.எஸ் பேட்டி....

-------------

மக்கள் நீதி மய்ய தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவுடன் கமல்ஹாசன் ஆலோசனை....

மார்ச் முதல் வாரத்தில் கூட்டணி குறித்து அதிகாரப் பூர்வமாக அறிவிக்க வாய்ப்பு.....

-------------

உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ்- சமாஜ்வாதி கட்சிகள் இடையே தொகுதிப் பங்கீடு...

காங்கிரஸுக்கு 17 தொகுதிகள் ஒதுக்கீடு செய்திருப்பதாக தகவல்... சமாஜ்வாதி 62 இடங்களில் போட்டியிட முடிவு.


Next Story

மேலும் செய்திகள்