"2023 இறுதிக்குள் இந்தியாவில் அனைத்து இடங்களிலும் 5ஜி " - முகேஷ் அம்பானி சொன்ன சூப்பர் தகவல்
5ஜி சேவைகளை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற இந்தியா மொபைல் மாநாட்டில் உரையாற்றிய முகேஷ் அம்பானி,மிகச் சிறந்த தரத்தில், மிகக் குறைந்த கட்டணத்தில் இந்தியா முழுவது 5ஜி சேவைகள் அளிக்கப்படும் என்று உறுதியளித்தார்.
பொதுத் துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்லை வலுப்படுத்த அரசு எடுத்துள்ள முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். மிக முக்கிய துறையான டெலிகாம் துறையில், பி.எஸ்.என்.எல் வலுப்பெறுவது, இதில் சமநிலையை உருவாக்கும் என்றார்.
2023 இறுதிக்குள் இந்தியாவின் அனைத்து நகரங்கள் மற்றும் தாலுக்காகளிலும் 5ஜி சேவைகளை ஜியோ நிறுவனம் செயல்படுத்தும் என்று உறுதி கூறினார்.
ஜியோவின் 5ஜி தொழில்நுட்பத்தின் பெரும் பகுதி இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளது என்றும், அதனால் ஆத்மநிர்பர் பாரத் முத்திரையை பெற்றுள்ளது என்றார்.
Next Story