31 நிமிடத்தில் 59 செய்திகள்... காலை தந்தி செய்திகள் | Thanthi Morning News | Speed News (22.05.2023)

x

தஞ்சாவூரில் மது அருந்திய இரண்டு பேர் உயிரிழந்த சம்பவத்தில், மதுவில் சயனைடு கலந்திருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக போலீஸ் தெரிவித்துள்ளது. கீழ அலங்கம் பகுதியில் அரசு மதுபான கடை அருகே பாரில் மது அருந்திய, இரண்டு பேர் உயிரிழந்தனர். இரண்டு பேரின் உடற்கூறு ஆய்வில் இருவரின் உடலிலும் சயனைடு இருப்பது தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இவர்களை கொலை செய்ய மதுவில் விஷம் கலக்கப்பட்டதா? அல்லது விஷம் கலந்த மதுவை குடித்து தற்கொலைக்கு முயன்றார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே மதுக்கடை பாரை மூடி அதிகாரிகள் சீல் வைத்தனர்..

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, சென்னையில் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை மனைவியுடன் சென்று பார்த்தார். நுங்கம்பாக்கத்தில் உள்ள ஃபோர் ஃப்ரேம்ஸ் திரையரங்கில் தி கேரளா ஸ்டோரி படத்தை ஆளுநர் பார்வையிட்டார். இதற்காக உள்ளேயும், வெளியேயும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. இதனிடையே, "தி கேரளா ஸ்டோரி" படத்தை பார்த்தேன் என்றும், ஒரு மெல்லிய கொடூரமான யதார்த்தத்தை அம்பலப்படுத்தியதற்கு நன்றி என, ஆளுநர் தமது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.


2024 தேர்தலில் தொண்டனாக இருந்து வேலை செய்வேன் என்றும், டெல்லி செல்ல தனக்கு விருப்பமில்லை என்றும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்காக தான் மாநில தலைவரானேன் என்று கூறியுள்ள அண்ணாமலை, திறமையான தலைவர்களை வெற்றி பெறச்செய்வதே தமது வேலை என்று தெரிவித்துள்ளார். மேலும், தமிழகம் முழுவதும் பனங்கள், தென்னங்கள்ளை ஊக்கவிக்க வேண்டும் என்று தெரிவித்த அவர், கள்ளை ஊக்குவிப்பதன் மூலம் விவசாயத்தை வளர்க்க முடியும் என்று கூறினார்.


தமிழ்நாடு முழுவதும் ஸ்விக்கி மூலம் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர். ஒரு கிலோ மீட்டருக்கு 10 ரூபாய், ஒரு ஆர்டருக்கு குறைந்தபட்சம் 30 ரூபாய் வழங்க கோரி வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஸ்லாட் முறையை திரும்ப பெறவும், ஏற்கனவே வழங்கி வந்த "Turn Over" தொகையை மீண்டும் வழங்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். வேலை நிறுத்த போராட்டத்தில் 10 ஆயிரம் பேர் வரை பங்கேற்பார்கள் என்பதால், சென்னை, வேலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் உணவு டெலிவரி சேவை பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்